16 மாத சம்பள நிலுவைத்தொகை - கண்டக்டர் இல்லாத பேருந்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சென்னை - பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச, -- சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்ட அறிவிப்பை, சிஐ டியூ பொது ச்செயலாளர் ஆறுமுக நயினார், செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.