தமிழ்நாடு

"நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சி பெற்றவர் IAS தேர்வில் தமிழக அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை

தந்தி டிவி

#naanmudhalvan #ias #dmk #mkstalin

"நான் முதல்வன் திட்டத்தில்" பயிற்சி பெற்றவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றி மேல் வெற்றியாக வந்து புகழ் மகுடம் சூட்டப் பட்டுள்ளதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Vovt

முதல்வரின் பிறந்த நாளன்று துவங்கப்பட்ட இத்திட்டத்தில் இதுவரை 28 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அளவில் 78வது இடத்தில் தமிழ்நாடு அளவில் 2வது இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள பிரசாத், தனது வெற்றிக்கு "நான் முதல்வன்" திட்டம் உதவியாக இருந்தது என்று தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் "நான் முதல்வன் திட்டம்" தனது கனவுத் திட்டம் மட்டுமல்லாது, இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என்றும், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகளே அதற்குச் சாட்சி எனவும் பெருமிதத்துடன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் செயல்படுத்தியுள்ள காலை உணவுத் திட்டம், இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து உலக அளவில் கனடா நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, "நான் முதல்வன் திட்டம்" மற்றொரு வெற்றிச் செய்தியைத் தந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு வெற்றிமேல் வெற்றியாக வந்து புகழ் மகுடம் சூட்டியுள்ளது என திமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு