தமிழ்நாடு

ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் ரத்து - பயணிகள், பக்தர்கள் தவிப்பு...

ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் தவிப்பு.

தந்தி டிவி

மண்டபத்தின் நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக 2 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட ரயில் பாலத்தில் 1914 முதல் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு வீசிய பலத்த காற்று காரணமாக பாம்பனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவைக் கப்பல் பாம்பன் பாலத்தில் மோதியது. இதனால் 2 வாரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் ரயில் சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாலத்தை முறையாக

பராமரிக்காத நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ரயில்வே துறையின் அலட்சியமே தற்போதைய நிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தீர்த்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மிகவும் இன்னல்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்