Train | Crowd | ஆத்தாடி ஆத்தா.. பார்க்கும் போதே மூச்சு முட்டுதே
சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் நெல்லை ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம்பிடிக்க, ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ரயில் வந்ததும் இடம்பிடிக்க பயணிகள் முண்டியடித்து ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.