சென்னை அடுத்த வண்டலூரில், உயிரியல் பூங்கா எதிரே நடைபெற்று வரும் மேம்பால பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் பாதையில் ஜிஎஸ்டி சாலை ஒரு வழி பாதையாக குறுகி விட்டதால் அந்த பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. இதனால் கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூர் வரை இரவில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேம்பால பணிகளை விரைவாக முடித்து வண்டலூர் மேம்பாலம் இறங்கும் பகுதியில் சாலையை அகலபடுத்தி போக்குவரத்தை சீரமைக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.