தமிழ்நாடு

காவலரை சாலையில் தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடைநீக்கம்...

காவலரை சாலையில் தள்ளிவிட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இடைநீக்கம்.

தந்தி டிவி

சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்துவரும் தர்மன், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம் தனது தாயின் இறுதிச் சடங்குக்கு விடுமுறை கேட்ட நிலையில், இதற்கு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த தர்மன், காவலர்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாக்கி டாக்கியில் விடுமுறை தராத ஆய்வாளர் குறித்து பேசியுள்ளார். இதையடுத்து, உயர் அதிகாரிகள் அவரை நேரில் அழைத்து எச்சரித்தனர். இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த ஆய்வாளர் ரவிச்சந்திரன், இருசக்கர வாகனத்தில் வந்த தர்மனை கீழே தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் ரவிசந்திரன் ஆயுதப்படைக்கு பணிமாற்றப்பட்டார். இதனிடையே, ரவிச்சந்திரனை பணி இடைநீக்கம் செய்து. சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்