திருச்சியில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து, தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். மேலும், இளைஞர் ஒருவரை பாடையில் வைத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, இவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர்.