தமிழ்நாடு

Kodaikanal | ஒரே நேரத்தில் கிளம்பிய டூரிஸ்ட் - நகராமல் நின்ற வாகனங்களால் ஸ்தம்பித்த கொடைக்கானல்

ஒரே நேரத்தில் கிளம்பிய டூரிஸ்ட் - நகராமல் நின்ற வாகனங்களால் ஸ்தம்பித்த கொடைக்கானல்

thanthitv

ஒரே நேரத்தில் கிளம்பிய டூரிஸ்ட் - நகராமல் நின்ற வாகனங்களால் ஸ்தம்பித்த கொடைக்கானல் #kodaikanal #traffic #tourist #thanthitv கோடை சீசன் மற்றும் கோடை விழா நிறைவடைவதை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாளான இன்று, கொடைக்கானல் நுழைவு பகுதி முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனூர், உகார்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது இடங்களுக்கு செல்ல நேரம் தாமதமாகி அவதியடைந்தனர். பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் நெரிசலுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CUET Exam | தாமதமான `CUET’ தேர்வு.. தொழில்நுட்ப கோளாறால் பரபரப்பு

Electric trains | Time Table | மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. புது அட்டவணை இதோ!

Tasmac Issue | மீண்டும் திறக்கப்பட்ட‌ டாஸ்மாக்.. தி.குன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

#BREAKING || Alangulam | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. ட்ரோன் வைத்து தூக்கிய போலீசார்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஈபிஎஸ் வைத்த செக்மேட்