ஊட்டி முதுமலை சாலையில் தெப்பக்காடு என்ற இடத்தில் ஒற்றை காட்டு யானை, சாலை ஓரம் முகாமிட்டு உலா வந்தது. இதனால் முதுமலை மைசூர் சாலையில் சுற்றுலா வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சாலையில் வரும் சுற்றுலா வாகனங்கள் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் நிறுத்தி அப்போது ஒற்றை காட்டு யானையை புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தனர். யானை அருகே சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்து வருகின்றனர்.