பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கின் தன்மையை அறிந்து கொள்ள தொடு திரை இயந்திரத்தின் சேவையை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி துவக்கி வைத்தார். பொதுமக்களின் வசதிக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அனைத்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மற்றும் விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாம் என, மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி கூறினார்.