தமிழ்நாடு

தக்காளி விவசாயிகளின் தலையில் இடியை இறக்கிய விலை.. - ஒரே மாதத்தில் இப்படியா?

தந்தி டிவி

கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்பட்ட தக்காளி, இன்று 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் உள்ள தக்காளி சந்தைகளில், கடந்த மாதம் தக்காளி வரத்து குறைவாக இருந்தால், கிலோ ௧௨௦ ரூபாய் முதல் 130 வரையில் விற்பனை ஆனது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள தக்காளி சந்தைகளுக்கு தக்காளி வரத்து திடீரென அதிகரித்தது. இதனால், கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

தற்போது ௧௫ கிலோ கொண்ட தக்காளி பெட்டி 100 ரூபாய் முதல் ௧௩௦ ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் கீழே சரிந்துள்ளது. நாளுக்கு நாள் தக்காளி வரத்து அதிகரித்து வருவதால், விலை மேலும் வீழ்ச்சி அடையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது கிடைக்கும் விலை தக்காளி செடியின் பராமரிப்பு செலவுக்கு கூட போதவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு