தமிழ்நாடு

"சுங்கச் சாவடி அவசர வழிகளில் நீதிபதிகளை அனுமதிக்க வேண்டும்" - உயர் நீதிமன்றம் உத்தரவு

சுங்கச் சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சுங்கச் சாவடிகளில், அரசு பேருந்துகள் நிலுவை சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'சுங்கச் சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் செல்லும்போது உரிய வழி இல்லை என்றும் ஓட்டுநர் அடையாள அட்டை காண்பித்தாலும் தரக்குறைவாக நடப்பதாகவும்' கண்டனம் தெரிவித்தனர். மேலும், சுங்கச் சாவடிகளில் அவசர வாகனங்கள் செல்லும் வழிகளில், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவ்வாறு அனுமதிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை