தமிழ்நாடு

Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16.09.2025) | 9 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது... நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது... • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது...தரமணி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மயிலாப்பூரில் 8 புள்ளி 2 செமீ மழை பதிவாகி உள்ளது... • திருப்பதி திருமலையில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது...தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள் அவதி அடைந்தனர்... • பெற்றோர்களை இழந்த‌ குழந்தைகளுக்கான அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...ஆதரவற்ற குழந்தைகளின் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.. • அரசியல் என்றால், பதவி மோகத்தில் இருக்கலாம் என சிலர் நினைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சாடினார்... தி.மு.க-வுக்கு எப்போதும் பொறுப்பு தான் முக்கியம் என பேசினார்...

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை