தமிழ்நாடு

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16.10.2025) | 6 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது... நாளை மாலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து மதுரைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது... • தீபாவளி பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... வண்டலூர் முதல் செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன... • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த மருமகனை மாமனார் கொலை செய்த விவகாரம்... ஏற்கனவே மாமனார் கைதான நிலையில், மாமியார் மற்றும் மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.... • ஈரோட்டில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால், கடை வீதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடுகிறது... இதனால் புத்தாடை வாங்க வந்த பொதுமக்களும், சாலையோர வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... • 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கூகுளின் முதல் செயற்கை நுண்ணறிவு மையம் ஆந்திராவில் அமைய உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்