தமிழ்நாடு

Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2025)| 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• கரூர் துயர சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்... காவல்துறை கடமை தவறிவிட்டதாகவும் சம்பவத்தில் தவெகவினர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.... • விதியை மீறி தவெகவினர் ரோடு ஷோ நடத்தியதாகவும், நீதிமன்ற நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தண்டபாணி குற்றம் சாட்டினார்...வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்த‌து தவெகவினர்தான் என்று விளக்கம் அளித்தார்... • கரூர் சென்று விரைவில் பாதிக்க‌ப்பட்ட மக்களை சந்திப்போம் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்...தனது தாயை இழந்த வேதனையை விட அதிக வேதனையடைந்த‌தாகவும், தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்றும் கூறினார்... • கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட த.வெ.க நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வழக்கில் பரபரபரப்பு வாதம் செய்யப்பட்டது....தாங்கள் கேட்ட இடத்தில் அனுமதி வழங்கவில்லை என தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.... • விஜய்யின் கூட்டம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் அவசர கால வழி எதுவும் இல்லை என த.வெ.க தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்...சென்டர் மீடியன்களை அகற்றியிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது எனவும் கரூர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்...

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’

Protest | புதிய தலைமை செயலகத்தை எதிர்த்து ஒன்றிணைந்த 9 மீனவ கிராமம்

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்