வேலூரில் இருந்து அரசு பேருந்து, போளூர் நோக்கி இரவில் சென்று கொண்டிருந்தது. அமிர்தி அருகே வேலாந்தூர் என்ற மலைப்பகுதியில், சாலையின் இரு மார்க்கத்திலும் தண்ணீர் சென்றதால், பேருந்து நடுவழியில் சிக்கிக்கொண்டது. அதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளனர். தண்ணீர் வடிந்த பிறகு தான் பேருந்தை மீட்க முடியும் என்றும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், போளூர் பணிமனை மேலாளர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.