குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கான கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் தொடங்கியது. முறைகேடு செய்த 39 பேர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மார்ச் 17ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர்.