தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் : டி.என்.பி.எஸ்.சி. செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விசாரணை

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக, தேர்வு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தந்தி டிவி

குரூப் 4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியதாக, தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர், ராமநாதபுரத்தில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது. தேர்வு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், மேற்பார்வையிட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்