டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறையில் உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறையில் பணிபுரியும் திருகுமரன் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற நிதீஷ் குமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மாஜிஸ்திரேட் நாகராஜன் முன் ஆஜர் படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.