தமிழ்நாடு

குரூப்4 தேர்வில் முறைகேடு என புகார் - உரிய விசாரணை நடத்த அரசுக்கு கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற குரூப் - 4 தேர்வினை 5 ஆயிரத்து 575 மையங்களில், சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமூக இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இந்த 2 மையங்களில் தேர்வு எழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே, அந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மாணவர்கள், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்