குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமை செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் பெண் ஊழியர் கவிதா சிக்கினார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவிதாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டதோடு, கவிதாவுக்கு குழந்தை பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாததால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமா என்பதை கருத்தில் கொள்ளுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியது.