தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி பணிகள் முடங்கும் அபாயம் - பணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருக்கும் அருள்மொழி மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 10 உறுப்பினர்கள் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போதைய தலைவராக உள்ள அருள்மொழியின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் தேர்வாணைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற துறைகளுக்கெல்லாம் ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பிலேயே ஏராளமான பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது, நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள 10 உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அடுத்த தலைவரை நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்