மாநில முழுவதும் கடந்த 11ஆம் தேதி நடந்த குரூப் 2வின் முதல்நிலைத்தேர்வை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இதற்கான விடைகளை டிஎன்பிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 6 கேள்விகளுக்கான விடைகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக தேர்வு எழுதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தவறான விடைகளுக்கு உரிய மதிப்பெண்களை டிஎன்பிஸ்சி வழங்க வேண்டும் எனவும் தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்