தமிழ்நாடு

"நிவாரணப் பொருட்கள்.." வெளியான வாட்ஸ் அப் எண்... அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

தந்தி டிவி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக இடைவிடாது பெய்த அதிகனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, குடிநீர், மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு வரப்பெறும் நிவாரணப் பொருட்களை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தொண்டு நிறுவனங்கள் 7397766651 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு