தமிழ்நாடு

தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு - உறுப்பினர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சுகாதாரத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவையின் நுழைவு வாயில் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் குழுவாக நின்று கொண்டு, பேரவை உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனிடையே, திமுக எம்.எல்.ஏ. சரவணன், முக கவசம் அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வந்தார். சுகாதார பணியாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரத்தை பெற்றுக் கொண்ட அவர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்தார்.

-

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்