தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு

வரும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வரும்16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளன. 2 வார காலமே அவகாசம் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இரு துறைகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளுடன், இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்