தமிழ்நாடு

TN Results | தமிழகம் முழுக்க வாக்கு எண்ணும் மையங்களில்.. வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு

தமிழகம் முழுக்க வாக்கு எண்ணும் மையங்களில்.. வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு

thanthitv

வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்க மின்வாரிய தலைவர் அறிவுறுத்தல் தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து மையங்களிலும் சீரான மின்சாரம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனைத் தங்குதடையின்றி கண்காணிக்கப் பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், கோடை வெயிலால் அதிகரித்து வரும் மின் நுகர்வைச் சமாளிக்க, பீக் ஹவர்ஸ் எனப்படும் உச்ச நேரங்களில், புகார்களை உடனடியாக விசாரிக்கத் துணைக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் மின் விநியோகம் தற்போது சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Ammonia Leak | Death | தமிழகத்தை உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் - மேலும் பறிபோன ஒரு உயிர்

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்