தமிழ்நாடு

TN Rain | Rainfall | திருச்சி மக்களை கலங்க வைத்த 2 மணி நேர மழை.. வீடுகளுக்குள் புகுந்த நீர்

thanthitv

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள‌து... அந்த காட்சிகளைபார்க்கலாம்.. திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில்,நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. வையம்பட்டியை அடுத்த தவளைவீரன்பட்டி பகுதியில் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் அப்பகுதிகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. இதில் தவளைவீரன்பட்டி பகுதியில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள அரசு பள்ளியில் தஞ்சம் புகுந்தனர்.

BREAKING || தமிழர்களின் நிலை என்ன? முதற்கட்டமாக வெளியான நிம்மதி செய்தி

Disaster | Nepal Flood | இந்த ஒரு ஊரில் இருந்து மட்டும் இத்தனை பேர் - கிடைத்த சோகமான தகவல்

BREAKING || நேபாள கோரத்தில் சிக்கிய தமிழர்கள்... விசயம் தெரிந்ததும் களத்தில் இறங்கிய தமிழக அரசு

Nepal | Flood | நாட்டையே நிலைகுலைய வைத்த பெரு வெள்ளம் - நேபாளத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை?

BREAKING || நேபாள பயங்கரத்தில் சிக்கிய பல தமிழர்கள் - எதிர்பாரா பேரதிர்ச்சி தகவல்.. எந்ததெந்த ஊர்?