உடல்நலக் குறைவால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் முதுநிலை தனி செயலாளராக பணிபுரிந்து உயிரிழந்த தாமோதரன் ஆகியோரின் குடும்பத்தாரிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.