கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மூன்றாவது வாரமாக இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் சோதனை செய்யப்படுகின்றன. முக்கியமாக சென்னையில் 312 இடங்களில் சோதனை நடத்தப்பட உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 350 இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.