தமிழ்நாடு

இலவச திட்டங்களுக்கான செலவை தமிழக அரசு குறைத்துள்ளது - மத்திய கணக்கு தணிக்கை குழு

சமீபத்தில் வெளியாகியுள்ள தணிக்கை அறிக்கையின் படி, 2016-17ம் நிதி ஆண்டில் அரசில் இலவச திட்டங்களுக்கான செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

2015-16ம் நிதி ஆண்டில் 6156 கோடியாக இருந்த இலவசங்களுக்கான செலவு, 2016-17ல் 4434 கோடியாக குறைந்துள்ளது (28% குறைவு).

2012-2017 வரையிலான 5 ஆண்டுகளில் விலையில்லா திட்டங்களுக்கு மிக குறைவாக செலவு செய்தது இந்த ஆண்டில் தான் என்று தணிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செலவு குறைக்கப்பட்ட திட்டங்கள் :

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி

2015-16: 2000 கோடி

2016-17: 933 கோடி (53% குறைவு)

இலவச ஆடு, மாடு

2015-16: 236 கோடி

2016-17: 43 கோடி (80% குறைவு)

இலவச மடிக்கணினி

2015-16: 1100 கோடி

2016-17: 511 கோடி (53% குறைவு)

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு

2015-16: 928 கோடி

2016-17: 593 கோடி (36% குறைவு)

அதே சமயம் - தாலிக்கு தங்கம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, இலசவ சீருடை, சைக்கிள், சானிடரி நாப்கின் போன்ற பெண்கள்/குழந்தைகளுக்கான இலவசங்களுக்கு நிதி குறைக்கப்படவில்லை.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு