TN Govt | CM Vijay | காமராஜர் காலை உணவுத் திட்டம் - TN அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான டெண்டர் அறிவிப்புகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது... புதிய டெண்டர் விதிகளின்படி, ரவா உப்புமா, வெண்பொங்கல், கிச்சடி உள்ளிட்ட 13 வகை உணவுகளில் நாள்தோறும் ஒரு உணவு சுழற்சி முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலை உணவு, 150 முதல் 200 கிராம் எடையுடனும், 294 கலோரி ஆற்றல் வழங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.. மேலும், இன்சுலேட்டட் ஹாட் பாக்ஸ்கள் மூலம் காலை 7:30 மணிக்குள் பள்ளிகளுக்குச் சூடான உணவை கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இந்த உணவு விநியோகம் மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உணவின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, பள்ளித் தலைமையாசிரியரின் சான்று பெற்ற பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு மாதாந்திரத் தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது