தமிழ்நாடு

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு

ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச்சத்தும் வேண்டும் என்பதால், சத்துணவில் வழங்க வேண்டிய முட்டைகளை வீடுகளுக்கு சென்று

மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாணவர்களின் வீடுகளுக்கு சென்று முட்டை வழங்குவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, சத்துணவுக்கு பதில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதைப் போல, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம், மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் பள்ளிகளுக்கு சென்று முட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர். இது தற்காலிக ஏற்பாடு தான் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே