தமிழ்நாடு

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை ரத்து செய்ய தமிழக அரசு கோரிக்கை.

தந்தி டிவி

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி, ராதா கிருஷ்ணன், சத்தியநாராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க கோரி, தமிழக வருவாய் துறை தரப்பில் கூடுதல் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள 4.78 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களில் 600 ஏக்கர் மட்டும் 20 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு பட்டா வழங்க பயன்படுத்தப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை