தமிழ்நாடு

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவிகிதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

லாபம் ஈட்டும், பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரம் நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன் படி, மின்வாரியம், அரசுபோக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் பணிபுரியும், சி அண்ட் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவிகிதம் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், தேயிலை தோட்டக்கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு அந்த நிறுவனங்களில் ஒதுக்க கூடிய உபரித்தொகையை கருத்தில் கொண்டு 20 அல்லது 10 சதவிகிதம் போனஸ் வழங்கப்படும்.

போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள், குறைந்தபட்சம் 8400 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை, போனஸ் பெறுவார்கள். 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்