ஆந்திர மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் - நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
ஆந்திர மீனவர்களின் தாக்குதல் தொடருவதால் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன் நாகை மீனவர்களின் படகை அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை தடுக்க, மீனவர்களின் எல்லையை வரையறுத்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.