நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் தவித்து வரும் நிலையில், முதற்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மனு அளிக்க நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மீனவர்களின் பெற்றோர்கள் மீனவர்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கதறி அழுதனர்.