தேனியில் , தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய அவர் விவசாயத்திற்கு போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் இயந்திரங்கள் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது என்றார். மேலும் தேனி மாவட்ட கிராமங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் எட்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளாடுகள் மூலம் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் பெருகி உள்ளதாகவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.