தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய சட்டத்துறை அமைச்சரின் அண்ணன் மகன் - நலம் விசாரித்த முதலமைச்சர் பழனிசாமி

மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

தந்தி டிவி
மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகனை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார். அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் அர்ஜுனுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பில் சமீபத்தில் வாங்கி கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மலையம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அர்ஜூன் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்