தமிழ்நாடு

"மீனவர் பிரச்சினை - தீர்வு வேண்டும்" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கோடியக்கரை அருகே கடந்த 1ஆம் தேதி நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

இவற்றை கண்மூடி வேடிக்கை பார்க்காமல் இதற்கு உரிய தீர்வு காண்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும் என அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்த விஷயத்தில் நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்