மேகதாது விவகாரம், புயல் பாதிப்பு தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சருடன், சட்டப்பேரவைத் தலைவர், அரசு கொறடா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்கக் கோரி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். எனவே, சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.