தமிழகம் - கேரளா இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்று கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர்
பழனிசாமி விளக்கம் அளித்தார்.