மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறப்பு
இதனிடையே, மேட்டூர் அணை , 65வது முறையாக 100 அடியை எட்டியது. இரவு 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 புள்ளி 70 அடியாக இருந்தது. தற்போது, நீர் வரத்து விநாடிக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.