அணையை திறந்து வைத்த பின் மேடையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா என கலங்கிய கண்களோடு உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சட்டம் போராட்டம் நடத்தி காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டதாகவும் முதலமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.