தமிழ்நாடு

தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி - தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஐதராபாத் மற்றும் தெலங்கானாவின் சில மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில், தமிழக மக்களின் சார்பாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் கையில், 10 கோடி ரூபாயை உடனடியாக தெலங்கானா முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் தமிழக அரசு சார்பில் வழங்கபடும் என்றும் முதலமைச்சர்

உறுதியளித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்