தமிழ்நாடு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதலமைச்சர்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் ஒன்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா கார்த்திக் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இதேபோல் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சவுரவ் கோஷல் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அனைவருக்கும் தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, பாராட்டு தெரிவித்து தனித்தனியாக கடிதமும் எழுதியுள்ளார். வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்