தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் கடலூர், சேலம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தந்தி டிவி

வருகின்ற 7-ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவும், தமிழகத்திற்குள் ரயில் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வீட்டை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பரவும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையை சமாளிப்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கடலூர், சேலம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும், இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்