தமிழ்நாடு

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் - முதலமைச்சர் தலைமையில் கூடுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.

தந்தி டிவி

இந்த ஆண்டின் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த மாதம் ஜனவரி 20-ந் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில், 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதேபோல், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்