சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பட்ஜெட் உரை வாசித்தார். தமிழக சட்டப் பேரவை இன்று கூடியவுடன் 10 மணிக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 127 பக்கம் கொண்ட பட்ஜெட்டில், நன்றி வாசிப்பு வரை 113 பக்கத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி உரை வாசிப்பு தொடர்ந்து நண்பகல் 1 மணி 17 நிமிடம் வரை இடைநில்லாமல் வாசித்தார். அதாவது, மொத்தம் 3 மணி நேரம் 17 நிமிடம் தொடர் உரை வாசிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார். இது நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட் வாசிப்பு நேரத்தைவிட அதிகம்.