மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார். எனினும், காட்டு யானைகளை விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உறுதி அளித்தார்.